பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

34



திருக்குறளார் தெளிவுரை 6. 10. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது:டம் உண்பது உம் இன்றிக் கெடும். 166 பிறருக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப் படுகிறவனுடைய சுற்றம் உடுப்பதும் உண்பதும் இல்லாமல் கெட்டுவிடும். . அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும். 167 பிறருடிைய செல்வம் கண்டபோது பொறாமைப் படுகின்றவனைப் பார்த்துத் திருமிகள் தானும் பொறாமல் தனக்கு மூத்தவளைக் காட்டி அவனிடம் சென்று இருக்குமாறு செய்வாள். அழுக்காறு எனஒரு பாலி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். 188 பொறாமை என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி தன்னையுடையானுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய நிலைக்குள் தள்ளிவிடுவான். . அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செல்வியான் கேடும் நினைக்கப் படும், 1.69 பொறாமையினைக் கொண்ட மனத்தாலுடைய செல்வப் பெருக்கமும், நல்ல மனமுடையவனுடைய வறுமையும், இருக்குமேயானால், ஆராய்ந்து அறிந்து கொள்ளப்படும். அழுக்கற்று அகன்றாரும் இல்லை.அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல், 170 பொறாமையினைக் கொண்டு பெரியார்களாயினாரும் இல்லை. அத் தீச் செயல் இல்லாதார் பெருக்கத்திலிருந்து நீக்கப்பட்டவராகவும் இல்லை.