பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்39



அறத்துப்பால் இல்லற இயல் 39 20. பயன் இல சொல்லாமை (யாருக்கும் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தலாகும்) 1. பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். 191 அறிவுடையார் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைப் பேசுகின்ற ஒருவன் எல்லா மக்களாலும் இகழப் படுவான். 2. பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல நட்டார்கண் செய்தலின் தீது. 192 'விரும்பத் தகாத செயல்களை நண்பர்களிடம் செய்வதை விடப் பயனொன்றும் இல்லாத சொற்களை அறிவுடையார் பலர் முன்னே ஒருவன் சொல்லுதல் தீதானதாகும். 3. நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல பாரித்து உரைக்கும் உரை. 193 பயனொன்றும் இல்லாதவற்றை ஒருவன் விரிவுபடுத்தி உரைக்கின்ற உரையானது அவன் நீதி இல்லாதவன் என்பதனைச் சொல்லிக் காட்டும். - 4. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லார் அகத்து. 194 நற்பயன் சேராத குணமில்லாத சொற்களைப் பலரிடத்திலும் ஒருவன் சொல்லுவானானால், அப்படிப் பட்டவனை, அவை நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும். 5. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல நீர்மை யுடையார் சொலின். 195 நற்குணமுடைய இனிய தன்மை வாய்ந்த பெரியோர்கள், பயனில்லாத சொற்களைச் சொன்னால் அவர்களுடைய மேன்மையும் நன்மதிப்பும் நீங்கிவிடும்.