பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

40



திருக்குறளார் தெளிவுரை 40 6. பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்ளனல் மக்கட் பதடி எனல். 196 பயனில்லாத சொற்களைப் பலகாலும் பாராட்டிப் 10. பேசுபவனை மனிதன் என்று கூறாதே மக்களுக்குள்ளே பதர் என்று சொல்லுக. நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன்இல சொல்லாமை நன்று. 197 சான்றோர்கள், நயமில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுவார்களாக: பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தல் நல்லதாகும். , அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். 198 அறிதற்கரிய நற்பயன்களை ஆய்ந்தறியும் அறிவுடையவர்கள், மிக்க பயனில்லாத சொற்களைச் சொல்ல மாட்டார்கள். பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர், #39 அஞ்ஞானத்திலிருந்து நீங்கிய துய அறிவினையுடைய பெரியோர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்கள். சொல்லுக சொல்லில் பயன்உடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல். 200 சொற்கள் பலவற்றுள்ளும் பயன்தரக்கூடிய சொற்களைச் சொல்லுவாயாக சொற்களில் டயனேதும் இல்லாத சொற்களைச் சொல்லாதிருப்பாயாக.