பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்43



அறத்துப்பால் இல்லற இயல் 43 22. ஒப்புரவு அறிதல் (உலக நடையினை அறிந்து பிறர்க்குப் பயன்பட்டு வாழ்தலாகும்) 1. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு. 211 தமக்கு நீரைத் தருகின்ற மேகங்களுக்கு உயிர்கள் என்ன கைம்மாறு (பதில் உதவி) செய்கின்றன? அதுபோல் மேகங்கள் போன்ற பெரியவர்கள் செய்கின்ற ஒப்புரவுகளும் கைம்மாறு எதிர்பார்ப்பன அல்ல. - 2. தாள்ஆற்றித் தந்த பொருள்ளல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. 212 தகுதியுடைய பெரியவர்களுக்கு, முயற்சி செய்து ஈட்டிய பொருளெல்லாம் ஒப்புரவு (உதவி) செய்வதற்கேயாகும். 3. புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே ஒப்புரவின் நல்ல பிற. 213 புத்தேள் உலகத்திலும் இவ்வுலகத்திலும் ஒப்புரவு போல (பிறர்க்கு உதவி செய்தல் போல) நல்ல பிற செயல்களைப் பெறுதல் அரிதாகும். 4. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். 214 உயிரோடு கூடி வாழ்பவன் என்பவன் உலக நடையினை அறிந்து வாழ்பவனாவான். அவ்வாறு அறிந்து வாழாதவன் ' செத்தவர்களுள் ஒருவனாக வைத்துக் கருதப்படுவான். 5. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகுஅலாம் பேரறி வாளன் திரு. 215 உலக நடையினை அறிந்து நடக்கின்ற பேரறிஞனுடைய செல்வமானது ஊரில் வாழ்பவர்கள் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்திருப்பது போலாகும்.