பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்45



அறத்துப்பால் இல்லற இயல் 45 5 23. Fা:5কb& (வறியவர்களுக்குக் கொடுத்தல் என்பதாம்) . வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து. 221 யாதொரு பொருளும் இல்லாதவர்களுக்கு ஒன்றினைக் கொடுப்பதே ஈகையாகும். அப்படிப்பட்டவர்கள் அல்லாதவர்க்குக் கொடுப்பது பின்வரும் பயனைக் கருதிக் கொடுக்கும் தன்மையுடையதாகும். நல்ஆறு எனினும் கொளல்தீது மேல்உலகம் இல்எனினும் ஈதலே நன்று. - 222 இரப்பது (யாசிப்பது) நன்னெறியாகும் என்று சொல்லுபவர்கள் இருந்தாலும் அது தீதான செயலாகும். ஈகையினைச் செய்வதால் மேலுலகம் அடைய முடியாதென்று சொன்னாலும் ஈதலே நன்று. . இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள. 223 தான் வறியவன் என்று சொல்லி வந்தவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் கொடுப்பதே நல்ல குடியில் பிறந்தவர்களிடத்தில் காணப்படும் நற்குணமாகும். . இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு. 224 யாசிப்பது மட்டும் அல்லாமல் யாசிக்கப்படுவதும் இன்பம் தருவது அல்ல; எதுவரைக்கும் என்றால், ஒரு பொருளை யாசிப்பவரது இனிய முகத்தினைக் காணுகின்றவரைக்கும் என்பதாகும். ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை - மாற்றுவார் ஆற்றலின் பின், 225 தவம் செய்பவர்களுக்கு வல்லமை எதுவென்றால் தமக்கு உண்டாகும் பசியைப் பொறுத்துக் கொள்ளுதலாகும். அந்த வல்லமையும் பொறுத்தற்கரிய அப்பசியைப் போக்குபவரது வல்லமைக்குப் பின் என்று சொல்லப்படும். -