பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

46



திருக்குறளார் தெளிவுரை 6. 13. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி, 226 வறியவர்களது கொடிய பசியை அறம் நோக்கிப் போக்குதல் வேண்டும். அப்படிச் செய்வதாவது, ஒருவன் தான் பெற்றிருக்கும் பொருளினைத் தனக்குப் பயன்படும்.டியாக வைக்கும் இடம் என்று கருதப்படும். அந்த அறவே இடமாகும். பாத்துண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது. 227 எப்போதும் பகுத்துப் பிறர்க்குக் கொடுத்து உண்ணப் பழகிய ஒருவனை, பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டுதல் இல்லை. ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்..ைமை வைத்துஇழக்கும் வன்க ணவர். 223 ஈதலினைச் செய்யாமல் தம்முடைய பொருளினைப் பத்திரமாக வைத்து இழந்துவிடுகின்ற இரக்கமற்றவர்கள். வறியவர்களுக்குக் கொடுத்து அவர்கள் மகிழ்வதனால் தமக்கு வரும் இன்யத்தினை அறியமாட்டார்களோ? இரத்தலின் இன்னது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். 229 நிறையச் சேர்த்து வைத்துத் தாமே .ண்டு மகிழ்கின்ற செயல், பிறரிடத்தில் சென்று யாசிப்பதனைவிடத் துன்பம் தருவதாகும். சாதலின் இன்னாதது இல்லை இனிது.அது உம் ஈதல் இயையக் கடை, 230 சாதல்போலத் துன்பம் தருவது வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சாதலும், வறியவர்களுக்குக் கொடுக்க முடியாதபோது இன்பம் தருவதாகும்.