பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

50



திருக்குறளார் தெளிவுரை 50 6. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்ப அருள்நீங்கி அல்லவை செய்துஒழுகு வார். 246 10. உயிர்களிடம் காட்டப்படும் அருளிலிருந்து நீங்கிக் கொடுமைகளைச் செய்து நடப்பவர்கள் உறுதிப் பொருளைச் செய்யாமல் தாம் துன்புறுகின்றமையை மறந்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247 பொருளில்லாதவர்களுக்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாதலைப் போல உயிர்கள் மீது அருளில்லாதவர்களுக்கு அவ்வுலகப் பேரின்பம் இல்லையாகும். . பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார் அற்றார்மற்று ஆதல் அரிது. 248 வறுமையிலிருந்தோர் ஒரு காலத்தில் செல்வத்தில் மிகுந்தோர் ஆவர். அவ்வாறு இல்லாமல் அருள் அற்றவர் அழிந்தோரேயாவர். பின்பு ஒரு காலத்திலும் அருளுடையவர் ஆவது இல்லை. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். 249 உயிர்களிடத்தில் அருளில்லாதவன் செய்கின்ற அறத்தினை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தது போன்றதாகும். வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து. 250 அருளில்லாதவன் தன்னைவிட எளியவர்கள் மீது அவர்களை நலியச் செய்யத் தான் செல்லும்போது, தன்னைவிட வலிமையுடையவர்கள் தன்னை நலியச் செய்ய வரும்போது, தான் அஞ்சி நிற்பதை நினைத்தல் வேண்டும்.