பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் சிறப்பு (திருவள்ளுவ மாலையிலிருந்து) ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர் வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம் - நத்தத்தனார் ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி வேதப் பொருனாய் மிகவிளங்கித்-தீதற்றோர் உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு. - மாங்குடி மருதனார் எல்லாப் பொருளும் இதன்பால் உன; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால் பரந்தபா வால்என் பயன்வள் ளுவனார் கரந்தபா வையத் துணை. - மதுரைத் தமிழ் நாயனார் பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புதேம் ஆவிற்கு அருமுனியா யானைக்கு-அமரரும்பல் தேவில் திருமால் எனச்சிறந்தது என்பவே பாவிற்கு வள்ளுவர்வெண் பா. - கவிசாகரப் பெருந்தேவனார் அறமுப்பத் தெட்டுப் பொருளெழுபது இன்பத் திறம்இருபத் தைந்தால் தெளிய - முறைமையால் வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார் ஓதவழுக்கு அற்றது உலகு, - மதுரைப் பெருமருதனார்