பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

60



திருக்குறளார் தெளிவுரை 60 6. பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை எல்லா அறமும் தரும். 296 பொய்யாமையினைப் போன்று புகழுக்குக் காரணமான வேறு எதுவும் இல்லை. வருத்தமின்றி எல்லா அறங்களையும் அதுவே கொடுப்பதாகும். 7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. 297 ஒருவன் பொய்யாமையையே பொய்யாமையையே செய்யும் ஆற்றல் பெற்றுவிட்டால், அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நல்லதாகும். 8. புறம்துாய்மை நீரான் அமையும்; அகம்துய்மை வாய்மையான் காணப் படும். 298 ஒருவனுக்கு உடம்பு தூய்மையாவது நீராலேயே அமையும். மனம் துய்மையாக இருப்பதென்பது வாய்tைhயால் உண்டாகிக் காணப்படும். 9. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. 299 புறத்தில் இருளினைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் ஆகாவாம். துறவறத் தன்மையால் நிறைந்த சான்றோர்க்கு விளக்காவது பொய்யாமையாகிற விளக்காகும். 10. யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும் வாய்மையின் நல்ல பிற. 300 யாம் மெய்ந்நூல்களாகக் கண்டவற்றுள் எத்தன்மையாலும் வாய்மையினைவிட மேலானதாகக் கூறப்படும் அறமே இல்லை என்பதாகும்.