பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

துறவற இயல்61



அறத்துப்பால் துறவற இயல் 61 31. வெகுளாமை (கோபத்தினால் வரும் தீமைகளும் அதனை 5. நீக்குதலும்) செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என். 301 சினம் பலிக்குமிடத்தில் அதனை வராமல் காப்பவனே அருளால் காப்பவனாவான். அது பலிக்காத இடத்தில் அதனைத் தடுத்தால் என்ன? தடுக்காமல் இருந்தால்தான் என்ன? . செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற. 302 கோபம் தன்னைவிட வலியவர்கள் மேல் உண்டாகுமானால் தனக்கே தீமையாகும். மற்ற எளியவர்கள் மீது சென்றால் அதனைவிடத் தீமையானது பிற இல்லையாகும். மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும், 303 யாவரிடத்தும் கோபத்தினை மறந்து விடுதல் வேண்டும். ஒருவருக்குத் தீமைகள் எல்லாம் அதனாலேயே வரும். . நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. 304 முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியான நகைப்பினையும் மனத்தில் தோன்றும் மகிழ்ச்சியினையும் கொன்றுவிடுகின்ற கோபத்தைவிட வேறு பகையும் உண்டோ? தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்ளையே கொல்லும் சினம். 305 தனக்குத் துன்பம் வராமல் காத்துக்கொள்ள நினைப்பானானால், தன் மனத்தில் கோபம் வராமல் காத்தல் வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிடில் தன்னையே அக்கோபம் கெடுத்துவிடும்.