பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

62



திருக்குறளார் தெளிவுரை 62 சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புனையைச் கடும். 30Յ சினம் என்னும் நெருப்பு தன்னை - ண்டாக்கியவரையே அல்லாமல் அவருக்கு இனம் என்னும் பாதுகாப்பாகிய மரக்கலத்தினையும் கடும். சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு நிலத்துஅறைந்தான் கையிழையா தற்று. 307 நிலத்தினை அறைந்தவனுடைய கையானது அந்த நிலத்தினையடைதல் தப்பதவாறு போல. சினத்தையே தனக்குக் குணமாகக் கொண்டிருப்பவன் கெடுவது உறுதி. இணர்எரி தோய்வன்ன இன்ன செயினும் புணரின் வெகுளாமை நன்று. 3O8 பல சுடர்களையுடைய பெரிய எரி (நெருப்பு) எல்லாம் வந்து ஒன்றாகச் சேர்ந்தது போன்ற துன்பத்தினை ஒருவன் செய்தாலும், கூடுமானால் அவன்மீது கோபிக்காதிருத்தல் நல்லது. உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளாள் வெகுளி எனின், 309 துறவியானவன் தன் மனத்தால் கோபத்தினை ஒருபோதும் நினைக்காமல் இருப்பானானiல், அவன் கருதிய செல்லங்கள் எல்லாவற்றினையும் ஒருங்கே பெறுவான். 10. இறந்தார் இறந்தார் அணையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. 3i () சினத்தில் மிகுந்து இருப்பவர்கள் உயிரோடிருப்பவர்களேயா னாலும் செத்தவருக்கு ஒப்பாவார். அந்தச் சினத்தினை விட்டவர்கள். உடம்பால் சாதல் தன்மையரேயானாலும் இறவாதவர்களுக்குச் சமமாவார்கள்.