பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

துறவற இயல்67



அறத்துப்பால் துறவற இயல் 67 34. நிலையாமை (தோற்றமுடையன யாவும் நிலைபெறாதவைகளாகும்) 1. நில்லா தவற்றை நிலையின என்றுணரும் \ புல்லறிவு ஆண்மை க.ை 331 நிலையில்லாத பொருள்களை நிலையானவை களென்று கருதுகின்ற புன்மையான அறிவு துறந்தார்க்கு இழிவாகும். 2. கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. 332 ஒருவனுக்குப் பெரிய செல்வம் வருதல் கூத்தாட்டத்தினைப் பார்க்க வந்த கூட்டம் போன்றதாகும். அச்செல்வம் அவனை விட்டுப் போவது, கூத்து முடிந்தவுடன் அக்கூட்டம் போவது போன்றதாகும். 3. அற்கா இயல்பிற்று செல்வம் அதுபெற்றால் அற்குட ஆங்கே செயல். 333 நிலைத்து நில்லாத தன்மையினையுடையது செல்வமாகும். அதனைப் பெற்றால் செய்யப்பட வேண்டிய அறங்களை அப்பொழுதே செய்தல் வேண்டும். 4. நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாள்.அது உணர்வார்ப் பெறின், 334 நாள், அறுக்கப்படுவதொரு காலத்தின் அளவுபோல் தன்னைக் காட்டிக் கொண்டு, அதனை உணர்வாரைட் பெற்றால் அறுத்துச் செல்லுகின்ற வாளினது வாய் இருக்கும் உயிர் ஆகும் என்பதாம். 5. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். 335 டிேச முடியாதபடி நாவினை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னமேயே அறச் செயலானது விரைவாகச் செய்யப்படுதல் வேண்டும். -