பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

துறவற இயல்71



அறத்துப்பால் துறவற இயல் 71 36. மெய்யுணர்தல் (பிறப்பு, வீடு என்பவற்றின் காரணங்களை ஐயமின்றி 5 உண்மையாக உணர்தல்) . பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருளான்.ஆம் மாணாப் பிறப்பு. 351 மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வினால் துன்பம் நிறைந்த பிறப்பு உண்டாவதாகும். . இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. 352 அஞ்ஞானமான மயக்கத்திலிருந்து நீங்கிய மெய்யுணர்வுடையார்களுக்கு அம்மெய்யுணர்வு பிறப்பினை நீக்கிப் பேரின்ப வீட்டினைக் கொடுக்கும். . ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நனியது உடைத்து. 353 ஐயங்களினின்று நீங்கி மெய்யுணர்ந்தவர்களுக்கு அடைய வேண்டிய வீட்டுலகம் இவ்வுலகத்தினைவிட அருகில் இருப்பதாகும். . ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. 354 மெய்யுணர்வினைப் பெறாதவர்களுக்கு, ஐம்புலன்களின் உணர்வுகள் அடக்கப்பட்டுத் தம்வசம் ஆகிவிட்டாலும், அவற்றால் பயனில்லையாகும். . எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள். மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355 யாதொரு பொருள் யாதொரு தன்மை உடையதாகத் தோன்றினாலும் அத்தோற்றத்தின்படியே கண்டறியாமல் அப்பொருளினுள் நின்று மெய்ம்மையாகிய பொருளைக் காண்பதே மெய்யுணர்வாகும்.