பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

துறவற இயல்75



يشبه றத்துப்பால் துறவற இயல் 75 5, 38. ஊழ் (ஊழின் தன்மை, வன்மை முதலியன கூறல்) ஆகுணழால் தோன்றும் அசைவுஇன்மை கைப்பொருள் போகுவாழால் தோன்றும் மடி. 371 ஒருவருக்குக் கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழினால் முயற்சியானது தோன்றும். பொருள் அழிவதற்குக் காரணமான ஊழினால் சோம்பல் தோன்றும். பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவகற்றும் ஆகல்ஊழ் உற்றக் கடை, 372 ஒருவனுக்கு எல்லா அறிவும் இருந்தாலும், கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழ் வந்தபோது, அது அந்த அறிவினைப் பேதையாக்கும். இனி, அவன் அறிவு சுருங்கி இருந்தாலும் கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ் வந்தபோது அது அவ்வறிவினை விரிக்கும். நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும். 373 ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றைக் கற்றிருந்தாலும், அவனுக்குப் பின்னும் தன் ஊழாலாகிய பேதைமை (அறியாமை) அறவே மேற்பட்டு நிற்கும். . இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. 374 உலகத்தில் ஊழினாலாகிய இயற்கை இரண்டு வகைப்படும். இரண்டு வேறுபட்ட தன்மையதாக இருக்கும். ஆதலால், செல்வம் உடையராதலும் வேறு. அறிவுடையராதலும் (தெள்ளியராதலும்) வேறு. நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. 375 செல்வத்தை ஆக்குவதற்கு நல்லவையெல்லாம் தீயனவாய் அழிக்கும். அதுவேயன்றித் தீயவையெல்லாம் நல்லனவாய் ஆக்கும். இவை ஊழினால் நடப்பதாகும். -