பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

80



திருக்குறளார் தெளிவுரை 6. 10. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. 398 மணலின்கண் இருக்கும் கேணியானது தோண்டிய அளவுதான் நீரினைச் சுரக்கும். மக்களுக்குக் கற்ற அளவுதான் அறிவு சுரக்கும். யாதானும் நாடுஆமால் ஊர்ஆமால் என்ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு. 397 கற்றவனுக்குத் தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த ஊரும் நாடும் தன்னுடைய ஊராகும்; நாடாகும். அப்படியிருக்க, ஒருவன் தான் இறக்குமளவும் கல்லாமல் காலம் கழிப்பது என்ன நினைத்தோ? , ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏம்ாப்பு உடைத்து. 398 ஒருவனுக்குத் தன் பிறப்பிலே கற்ற கல்வியானது எழுகின்ற LJ6) பிறப்புக்களிலும் பாதுகாப்பாக உதவுதலை உடையதாகும். . தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். 399 தாங்கள் இன்பமடைவதற்குக் காரணமான கல்விக்கு உலகமானது இன்பமடைவதைக் கண்டறிந்த கற்றறிந்தவர் பின்னும் அக்கல்வியினையே பெரிதும் விரும்புவர். கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடுஅல்ல மற்றை யவை. 400 ஒருவனுக்கு அழியாத சீரிய செல்வமானது கல்வியேயாகும். அஃது அல்லாமல் மற்றைய செல்வங்கள் எல்லாம் பெருமையானவை அல்ல.