பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்83



பொருட்பால் அரசியல் 83 42. கேள்வி (கற்றறிந்தவர் சொல்வதைக் கேட்டல்) 1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை, 4.1.1 ஒருவர்க்குச் சிறப்புடைய செல்வமானது செவியால் வரும் செல்வமாகும். அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றையும் விடத் தலையாய செல்வமாகும். 2. செவிக்கு உணவுஇல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். 412 காதுக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது வயிற்றுக்கும் சிறிதளவு உணவு இடப்படும். 3. செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து. 413 செவி உணவாகிய கேள்வியினையுடையவர்கள், பூமியில் வாழ்பவர்களாக இருந்தாலும் அவி உணவினையுடைய தேவர்களோடு ஒப்பாவார்கள். 4. கற்றிலன் ஆயினும் கேட்க அஃது.ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை. 414 நூல்களை ஒருவன் கற்காவிட்டாலும், கற்றறிந்தார் சொல்லக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்பது, ஒருவனுக்குத் தளர்ச்சி வந்த காலத்தில் பற்றுக் கோடாகத் துணை செய்யும். 5. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். 415 வழுக்குதலையுடைய சேற்று நிலத்தில் நடந்து போகின்றவர்களுக்கு ஊன்றுகோல் போல, துன்பம் வந்த காலத்தில் ஒழுக்கமுடையவர்களுடைய வாயிலிருந்து வரும் சொற்கள் துணையாக நின்று உதவும்,