பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தானே. ‘கண்போல’க் காப்பாற்று என்று பேசுகின்ற நடைமுறைப் பழக்கம் நமக்குப் புதுமையானதன்று.

அப்படிப்பட்ட கண்களும் தங்களின் பெருமையினைக் காப்பாற்றுகின்ற பார்வை பயனில்லாமல் போகின்ற நேரம் எப்போது என்பது நமக்குத் தெரியுமே கண்ணுல் பார்த்தால் எல்லாம் தெரியும் என்று சொல்லுகின்றோம். ஆம்; உண்மைதான். எப்போது தெரியும்? வெளியில் வெளிச்சம் இருந்தால்தான் கண்களால் பார்க்க முடியும் என்னும் உண்மையினையும் நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

சூரியனுடைய வெளிச்சமோ அல்லது சந்திரனுடைய ஒளியோ இல்லை யென்றால் சிறப்பாகப் பேசப்படுகின்ற கண்களும் பயனற்றனவாகப் போகின்றனவே. இருளில் கண்கள் எதைப் பார்க்க முடியும் ? கண்களுக்கு மிகச் சிறந்த பெருமையினை அளித்தாலும் வெளிச்சம் இல்லையென்றால் கண்கள் இருந்தும் இல்லாததாகத்தானே நினைக்க வேண்டும்.

உலக வாழ்க்கையில் பொருள் மிகமிக இன்றியமையாத இடம் பெறுவது உண்மைதான். அப்பொருளினைப் பெற்றவன் மக்கள் சேவை-உலகத்தொண்டு-ஈகை அதனால் வருகின்ற உண்மையான புகழ் - என்னும் பிறவிப் பயன் களைச் சிந்தித்துப்பார்க்காமல் ‘கருவி’ போல வாழ்ந்துபொருளினை ஈட்டி வாழ்ந்து - மறைவானேயானல் அவன் இப்பூமிக்கே பாரமானவனாக இருந்தான் என்றுதானே அர்த்தமாகும்.

கண்களுக்கு, வெளிச்சம் தேவை போல, பொருள் வைத்திருப்பவனுக்கு வாழ்க்கைப் பயன் என்னும் புகழ் தேவையாயிற்றே. மனித வாழ்க்கையின் இவ் வுண்மையினை அறிந்து வாழ்கின்ற மக்கள் நிறைந்திருக்கும் நாடு எதுவோ அந்த நாடு உலகில் சிறந்த நாடாகப் பெருமையுடன் வாழ்வதாகின்றது. இந்த உயரிய நோக்கம் இல்லாத மக்களின் கும்பல் அதிகரித்திருக்கும் நாடு வறுமையும் துன்பமும் முன்னேற்ற