பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

மில்லாமையும் மலிந்த நாடாகத் தான் இருக்க முடியும் என்பதாகும். மனித தத்துவத்தை ஆசிரியர் அழகாக விளக்குகிறார். பெரும்பாலானவர்கள் மட்டபுத்தியில் திளைத்து வாழ்வதை அப்படியே வடித்தெடுத்துக் கூறி வைக்கின்றார்.

பொருள் :

“பொருளினால்தான் இவ்வுலகில் எல்லாம் நடக்கும் எச்செயலும் உண்டாகும்; என்று சொல்லிக்கொண்டும் எண்ணிக்கொண்டும், அப்பொருளினையே குறிக்கோளாகக் கொண்டு அதனையே சம்பாதித்துச் சேர்த்து வைத்து ‘ஈதல்’! என்பதையே அறியாது ‘கஞ்சனாக’ வாழ்ந்துகொண்டு அஃதாவது ‘உலோபியாக’ இருந்து கொண்டு, அதே ‘கருமித்தனம்’ என்னும் மயக்கத்திலேயே வாழ்பவன் மிகக் கேவலமான பிறப்புடையவனாவான்” என்னும் உண்மையினைக் கூறுகிறது குறட்பா.

பொருளானாம் எல்லாம் என்று யாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

இவ் வுலகில் பிறந்து வாழ்வதே பொருளினை எப்படியும் சேர்த்து வைத்து ‘உலோபியாக’ இருந்து மறைவதற்காகத்தான் என்று இருப்பவனை என்ன வென்று கூறுவது.

‘பொருளானாம் எல்லாம்’ என்ற சொற்கள் உலகியல் பேச்சினை மிக அழகாகக் கூறுகின்றது. ‘எல்லாம் பணத் தாலேதான்’ என்று பேசுகின்றார்களே, அதனைத்தான் இவ்வாறு கூறி வைத்தார்.

இதனையே ‘மந்திரமாக’ நினைத்துக்கொண்டே இருப்பவனைப் ‘பைசாசம்’ என்று சொல்லுகிறார்களே, அப்படியே ஆசிரியர் கூறி வைத்தார் என்பதாகும். ‘மாணாப் பிறப்பு’ என்பது அப்படிப்பட்டவன் பிறவியினை இழித்துக் கூறியதாகும்.