பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

‘எம தர்மன் தர்பார்’ நடந்துகொண்டிருக்கும்போது நரகலோக ஏவலாட்கள் ஒருவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வந்து எம தர்மன் முன்னே நிறுத்தினார்கள், உடனே எம தர்மராஜன் அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பதென்று அவன் பூவுலகில் வாழ்ந்த வாழ்க்கையின் கணக்கினைப் புரட்டிப் பார்த்தான். உண்மை யறிந்து கொண்டான்.

உடனே ஏவலாட்களுக்கு உத்தரவிட்டான் ‘இவன் உலகில் நிறையப் பணம் சேர்த்துப் பணக்காரனாக இருந்தவன். ஆனால், எள்ளளவும் பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்னும் புத்தியே இல்லாமல் வாழ்ந்திருக்கின்றான். இவன் சரித்திரம் சொல்லுகிறது. இவனைக் கழுவிலேற்றி, பழுக்கக் காய்ச்சிய உலக்கையால் இவன் உடம்பை யெல்லாம் தழுவி உருட்டிக் கொல்லுங்கள். அதே நேரத்தில் இவனுடைய வலக்கையில் இருக்கும் ஆள்காட்டி விரலை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுங்கள்.’ இவ்வாறாக அந்த எம தர்மராஜன் உத்தரவு வந்தது.

இதைக் கேட்டவுடன் அந்த உலோபி எம தர்ம ராஜாவைப் பார்த்துக் கேட்டான், “ராஜாவே! எனக்குக் கொடுத்த தண்டனையை நான் அனுபவிக்கத் தாயாராகத் தான் இருக்கின்றேன். ஆனால், அடியேனுக்கு ஒரு சந்தேகம். அதைத் தீர்த்துவைக்க வேண்டுகின்றேன். வலக்கையில் ஆள்காட்டிப் பெருவிரலை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடச் சொன்னீர்களே, அது ஏனோ? தெளிவாக்க வேண்டுகிறேன்.” என்றான்.

அவர் சொன்னார், அடே பாவி! நீ மிகவும் உலோபத்தனமாக வாழ்ந்த கொடியவன்தான். அப்படி இருந்தாலும் நீ நெஞ்சிலே கொடுந் தீய புத்தி வைத் திருந்தும் அந்த விரல் மட்டும் தர்மம் செய்திருக்கிறது: எப்படி யென்றாலோ கேட்பாயாக.