பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

விரல் :

எமதர்ம ராஜா சொல்லிய தர்மத்தின் பயன் அவனுக்கு நன்றாக மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது. அதனையே எப்போதும் நினைத்துக்கொண்டிருந்தான். ‘விரலை’ விட்டுவிட்ட நினைவு அவனுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தது. உலோபியின் மனப்பாங்கு மட்டும் அவனை விட்டு நீங்கவே இல்லையாம். எமதர்மனை எப்படி ஏமாற்றுவது என்னும் புத்திதான் அவனுக்கு மேலோங்கி நின்றதே யல்லாமல் தர்மம் செய்யவேண்டும் என்னும் எண்ணம் உண்டாகவே இல்லை. எப்போதும் போல யாசிப்பவர்கள் தர்மத்திற்கு வந்துகொண்டிருந்தார்கள்.

உலோபி மட்டும் பழைய பல்லவியிலேயே இருந்து விட்டான். தர்மம் கேட்பவர்களுக்குத் தர்மம் செய்ய மறுத்துவிட்டான். எமதர்மனிடம் சொல்வியபடி நடக்க வில்லை. ஆனால் எப்படி ஏமாற்றுவது என்பதில் மட்டும் நாட்டமாக இருந்தான், முன்னர்த் தர்மமென்று வந்தவர் களுக்கு விரலால் காட்டினன். இப்போது விரலால் காட்டு வதில்லையாம். விரலால் காட்டியதற்குத் தான் விரலை மட்டும் விட்டுவிட்டான்.

ஆதலால் உடம்பு முழுவதும் காப்பாற்றவேண்டு மென்றால் உடம்பு முழுவதாலும் காட்டினால், உடம்பு முழுவதையுமே யமன் விட்டுவிடுவான் என்று எண்ணி அப்படிச் செய்ய ஆரம்பித்துவிட்டானாம். அவனுடைய எண்ணம் முன்பு போலவே இருந்தது மல்லாமல் உலகத்தையும் தன்னையும் ஏமாற்ற எண்ணியதை யறிந்த எமதர்ம ராஜன் உடனே ஆட்களை அனுப்பி மறுபடியும் அந்த உலோபியை நரகத்திற்குக் கொண்டுபோய்விட்டானாம்.

‘மாணாப் பிறப்பு’ என்று ஆசிரியர் குறித்துக் காட்டிய பிறவிகள் மக்களிடையே வாழ்ந்து வருவதைவிட வாழாமல் இருப்பதுதான் மேல். இவர்களால் பிறருக்குத் துன்பமே யல்லாமல் வேறு இன்பம் இல்லை. பொருளும் பொருளால்