பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

பணமும் நற்குணமும் இருப்பவன் இறந்தானேயானால் குணத்திற்காக யாவரும் வருந்தவேண்டியது இயல்பாக இருக்கின்றது.

உயர்ந்த பெருங்குடியில் பிறந்தவர்கள் பால் காணப்படும் அரிய குணங்களாகக் கூறிய நான்கினுள் நகை, ஈகை என்னும் இரண்டும் மிகவும் சிறப்பாகக் கண்டுணர வேண்டியவைகளாகவும், அவ்வாறே இன்சோல், இகழாமை ஆகிய இரண்டும் சிறப்பிக்கப்படுகின்றன. நகையும் ஈகையும் செயல்படுகின்றபோது; பிறர்பால் பேசப்படுகிறபோது பிறர் பால் பேசப்படுகின்ற முறையில் இன்சொலும், இகழாமையும் காணப்படுகின்றன.

இனிமையான சொற்களைப் பேசுவதென்பது ஒருவருடைய உள்ளப் பாங்கினையும் பரம்பரையினையும் மெய்ப்பித்துக் கூறுகின்றன. எக்காரியத்தினையும் நல்ல முறையில் செய்துமுடிக்கவும் மக்கள் இனத்தை ஒன்றுபடுத்தி வளர்க்கவும் இன்சொல் பேசும் அரிய குணம் பயன்படுவதாகின்றது.

இன்சொல் பேசும் நற்பழக்கம் இயல்பாகவே அமைந்திருக்க அவைகளை விட்டுக் கீழ்த்தரமான சொற்களையும் வெறுக்கத்தக்க சொற்களையும் பேசும் மக்கள் கூட்டத்தினையும்தான் காணுகின்றோம். பேசும் சொற்களைக் கொண்டே ஒருவனுடைய குடிப்பிறப்பினையும் நிலையினையும் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

வேர் :

நிலத்தில் விளைகின்ற செடிகளை வைத்துக்கொண்டு நல்லதொரு செய்தியினை ஆசிரியர் விளக்குகின்றார். ஒரு நிலத்தின் குணத்தினை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும் ? அஃதாவது விளைகின்ற நிலமா அல்லது எதுவும் விளையாத நிலமா என்பதையும் - பயனுள்ள மண்ணுள்ள - நிலமா இல்லையா என்பதையும் புரிந்துணரக்கூடிய வழி யாது?