பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

அம்மண்ணில் முளைக்கின்ற செடி அல்லது பயிரின் வேர்முனையினை எடுத்துப் பார்த்தால் அந்த மண்ணின் குணமும் நன்மையும் எளிதில் விளங்கும் என்பதாம். முளைத்த மாத்திரத்திலேயே அந்த முளையானது அம்மண்ணின் இயல்பினைக் காட்டிவிடும்.

அதுபோலவே ஒருவர் பேசுகின்ற பேச்சில் இருக்கும் சொற்களும் ஒருவர் பிறந்த குலத்தினையும் அவரது பரம்பரையினையும் மற்றும் தெரிந்துகொள்ளாமலிருந்த பலவற்றையும் தெரிவித்துவிடுமாம். எளிமையான குறட்பா வொன்றினைக் காணுவோம்.

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் ; காட்டும்

குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.

இதனுடைய சுருக்கமான குறிப்பினைக் கண்டுகொள்ளுதல் எளிமையாயிற்று. நிலத்தினுடைய இயல்பினை அந்நிலத்தில் முளைத்த முளை - வேர் - காட்டுவது போல, ஒருவன் பிறந்த குலத்தின் தன்மையினை அவனுடைய வாய்மொழி காட்டிவிடும் என்பதாம்.

நிலத்தினை எவ்வாறு உவமை காட்டினார் என்பது சிந்திக்கத் தக்கதாகும். ஒருவனுடைய தோற்றமோ, கல்வியோ, பணமோ அல்லது வேறு எதுவும் அவன் பிறந்த குடி உயர்ந்த பண்பாளர்கள் குடும்பமா அல்லது கயவர்கள் கொண்ட குடும்பமா என்பதனைக் காட்டிவிடாதாம். அவனுடைய வாயினால் வருகின்ற வாய்மொழிகளைக் கொண்டே அவன் பிறந்த பரம்பரையின் நிலைமையினை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

நிலத்தின் ஆழத்தினையும், பரப்பையும் அந்நிலத்தினையும் எவ்வாறு உணர்ந்துகொள்ள முடியும் ? அஃதாவது அதன் குணத்தினைப் புரிந்துகொள்ள மூல காரணப் பொருளாக அம் மண்ணில் முளைத்த செடியின் முளை அல்லது வேர் உதவுவதுபோல் ஒருவனுடைய வாய்