பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

மொழியாகிய முளை அவனுடைய குலத்தினை எடுத்துக் காட்டும் என்னும் உண்மையினை விளக்கினார்.

இக் குறட்பாவில் இரண்டு முறை ‘காட்டும்’ என்னும் சொல்வினைப் பயன்படுத்துகிறார். அவ்வளவு உறுதிப் பாட்டுடன் கருத்து விளக்கப்பட்டது. ‘கால்’ என்றது முதற்காரணமான ‘முளை’யென்பதனை யாகும். அந்த முளை நிலத்தின் தன்மையினைக் காட்டும் என்றும், ஒருவனுடைய வாய்ச்சொல் அவன் பிறந்த குலத்தினைக் காட்டும் என்றும் கூறி வைத்தார்.

உள்ளத் தூய்மையின் அடிப்படையாக வந்த அன்பொடு கலந்து வருகின்ற சொற்களுக்கே இன்சொல் என்று பெயராகும். இன்சொல் எப்போதும் மலர்ந்த முகத்திலே தான் தோன்றும். இன்சொல் பேசிப் பழகும் பண்பாளர்களைத் துன்பமே அணுகாது என்பது உலகியல் உண்மையாகும். இன்சொல் பேசும் உயர்ந்த பண்புடன், பணிவு என்னும் சிறந்த குணமும் உண்டாகிவிடுமேயானல் அதுவே ஒருவன் வாழ்க்கையினை ஒளிவிட்டு மின்னுமாறு செய்யும் என்பதாகும்.

பெரிய பயனையும் நன்மையினையும் அளிக்கக்கூடிய இன்சொற்களை வழங்கும் பழக்கத்தினை விட்டுவிட்டு வன்சொற்களை வழங்குகின்றார்களே அஃது எதனாலோ ? என்று மனம் வருந்திக் கேட்கின்றார் ஆசிரியர்.

நிலத்தினையும் முளையினையும் வைத்துக்கொண்டு வாய்மொழியினையும் குலத்தினையும் ஒப்பிட்டுக் காட்டும் முறைமை பல முறையும் சிந்தித்து அறிய வேண்டியதாகும். ஆசிரியர் வள்ளுவனார் கூறும் உவமைகளின் தனிச் சிறப்பு சொல்வதற்கரியதாகும். தமது நூலின்கண் கூறப்படும் பல உவமைகளையும் அளந்து உலக அனுபவத்தில் இசையுமாறு அமைத்து எளிமையான முறையில் அமைக்கின்றார்.

உவமைகள் சொல்லுகின்றபோது எளிமை என்னும் தன்மை முதன்மையாக இருத்தல் வேண்டும் என்பது