பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


அலைகள் மோதுவதால், உவமைகள் - உதாரணங்கள் - என்னும் நுரைகள் உண்டாவது இயற்கையாகு மன்றோ?

நம் ஆசிரியர் திருவள்ளுவனார் உள்ளம் கடல் போன்றதல்லவா? அங்கிருந்து வருகின்ற கருத்துகளுக்கு அளவு ஏது? உள்ளத்தில் தோன்றும் அரிய உவமைகளில் ஒன்றினை மேலே கண்டோம். நகை, ஈகை, இன்சொல் ஆகிய மூன்று. அரிய குணங்களுடன் கடைசியாகக் கூறப்படும் நான்காவது பண்பாடு இகழாமை என்பதாகும்.

நற் குடியிற் பிறந்தவர்கள் பிறரை இகழ்ந்து பேசுகின்ற கீழான குணத்தினைக் கனவிலும் நினைக்கமாட்டார்கள். தாழ்மையான இழி குலப் பழக்கத்தில் வாழ்கின்றவர்கள் மற்றவர்களை இகழ்ந்து பேசுவதையே தொழிலாகவும் கொண்டிருப்பவர்களாவர். பிறரைத் தாழ்த்திப் பேசுதல் கயவர்களிடம் காணப்படும் பழக்கமே யாகும்.

மற்றவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசும்போது சிலருக்குக் கேட்கவே பிடிக்காது. கசப்பாக இருக்கும். செவி கொடுத்துக் கேட்க வெறுப்பார்கள். ஆனால் சிலர் மற்றவர்களைப் பற்றிக் குறைவாகவும் இழிவாகவும் யாராவது பேசினால் மனம் மகிழ்ந்து அகங் குளிரக் கேட்பார்கள். மேலும் சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருப்பர். என்னே உலகம்! இழி குலம் பெற்ற இப் பிறவிகளை எந்த வகையில் வைப்பதோ!

பொறுமை :

உலக அனுபவத்தில் அறிவுரைத் துறை பேசவந்த நம் ஆசிரியர், இகழ்ந்து பேசுகிறவர்களையும் நாம் பொறுத்தருள வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். மற்றவன் இகழ்ந்து பேசுவதால் நம்முடைய சிறப்பு குறைந்துபோவது ஒருகாலும் இல்லை. இகழ்ந்து பேசுகின்றவன் தானே திருந்தி உண்மை யுணர்வான் என்பதும் உறுதி.

தீய உள்ளம் படைத்தவர்களிடத்தில் 'இகழ்தல்' என்னும் பழக்கம் மலிந்து நிற்கும். இகழ்வதால், இன்பம்