பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


அடைவதாகக் கூடக் கயவர். கூட்டம் எண்ணி மகிழ்ந்து வாழும். பெருமை, நிறைந்த சான்றோர்கள் தம்மை இகழ்ந்து பேசுடாவர்களையும் பொறுத்தருளல் வேண்டு மென்று ஆசிரியர் கூறி அழகிய எடுத்துக்காட்டு ஒன்றினையும், நம் கண்முன் நிறுத்திக் காட்டுகிறார். குறிப்பாக இகழ்ந்து பேசுபவர்களைக் குறித்தே குறட்பா தரட்படுகின்றது.

"தன்னை வெட்டுவோரையும் பொறுத்துத் தாங்கும் நிலத்தினைப் போல, தம்மை இகழ்வோரையும் பொறுத்தருளல் சிறந்த குணமாகும் என்னும் கருத்தினை விளக்குகிறது குறட்பா.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தம்மை இகழ்ந்து பேசுகின்றவர்களையும் கருணை கொண்டு பொறுத்தருள வேண்டும் என்று பெரியோர்களுக்கு அறவுரைகள் சொல்லுகின்றார் என்றால், பெரியோர்கள் பிறரை இகழ்ந்து பேசும் பழக்கத்தினைக் கனவிலும் கருத மாட்டார்கள் என்பது வெள்ளிடைமலையான உண்மையாகும்.

நிலம் தன்னை வெட்டித் தோண்டுகிறவர்களையும் பொறுத்துக்கொண்டிருக்கின்ற தென்பது மட்டும் அன்று; அப்படிச் செய்கிறவர்களையும் தாங்கிக்கொண்டல்லவா இருக்கின்றது. காற்று, நீர் போல மாறுதலடையாமல் சலிக்காது அப்படியே பொறுத்துக்கொண்டிருட்பதால் நிலத்திற்குப் பெருமை அதிகப்பட்டதாகிவிட்டது.

அதுபோலவே சான்றோர்கள் தங்களை இகழ்ந்து. பேசும் மற்றவர்களைப் பொறுத்துக்கொள்வார்கள் என்பது மட்டுமன்று; தம்முடைய ஆதரவிலேயே இருந்து தம்மை இகழ்ந்து பேசும் அற்பர்களும் இருக்கச் செய்வார்கள் அல்லவா? அப்படி நேரிட்டாலும் பொறுத்துக் கொள்ளுதலே உயர்ந்த பண்பாளர்களுடைய தன்மை என்பதனையும் விளக்கிக் காட்டினார்.