பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


அறம் :

பூமியின் சிறப்பினைக் கூறும் பொழு தெல்லாம் அதனுடைய பெருமையைக் குறிக்க, பொறுமை என்னும் பண்பாட்டினைக் கூறுதல் உலகியல் மரபாகும். எல்லையற்ற பொறுமை கொண்டது பூமியே யாகும். பிறரை இகழ்ந்து பேசுபவர்களையும் இப் பூமி தாங்கிக் கொண்டுதானே இருக்கிறதென்று வியப்புக் குறியுடன் ஆசிரியர் குறித்துக் காட்டும் இடம் மிகவும் ஆழமாக அமைந்துள்ளது.

இகழ்ந்து பேசுகின்ற புத்தியுள்ளவர்கள் எப்போதும் புறம் பேசுதல் அல்லது புறங் கூறுதல் என்னும் தீய புத்தி உள்ளவர்களாகவே இருப்பர். அற்பமான எண்ணமும் சொல்லும் உடையவர்களை இப் பூமியானது அதுவே அறம் என்று. எண்ணிச் சுமந்துகொண்டிருக்கின்றதோ என்பது ஆசிரியரின் கேள்வி போலவும் தொனிக்கின்றது.

அறம்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறம்நோக்கி

புன்சொல் உரைப்பான் பொறை.

'பொறை' என்று குறிப்பிட்டது. இப்படிப்பட்ட அற்பமான சொற்களைச் சொல்லிக்கொண்டு திரிந்து வருகின்றானே அவனுடைய உடல் பாரத்தை யாகும். அதனையும் சுமந்துகொண்டு இந்தப் பூமி இருக்கின்றதே என்பதைத் தான் 'ஆற்றுங்கொல்' என்று கூறினார்.

இவ் வுலகிலேயே அப்படிப்பட்டவர்கள் வாழ்வதற்கு உரிமை யில்லாதவர்கள் என்பதாகும். வையம் ஆற்றுங்கொல் என்று விளக்கமாகவும் தெளிவுபடுத்தினார். அறம் நோக்கி ஆற்றுங்கொல் வையம்' என்னும் தொடர் ஆசிரியரின் உள்ளப்பாங்கினை அப்படியே எடுத்துக்காட்டி விட்டது. புறம் பேசியும்-இகழ்ந்து பேசியும் பழகுகின்றவன் உரைப்பதெல்லாம் புன் சொற்களேயாகுமன்றோ!

பூமிக்கு எல்லாப் பொருள்களையும் சுமப்பது இயல்பே யென்றாலும், இப்படிப்பட்ட தகாதவர்களையும் சுமக்-