பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


கின்றதே என்பதை நினைக்கும்போது அறம் என்று எண்ணிச் சுமந்து கொண்டிருக்கின்றது போலும் என்பதாக நயமாகக் கூறினார்.

தீய குணமுடையாரின் அருகில் செல்லுதலும் அவர்களுடன் சேர்ந்து பழகுதலும் எவ்வளவு தீமையினை உண்டாக்குவனவாகும் என்பது குறிக்கப்பட்டது. தீயகுணம் உள்ளவர்கள் எல்லா விதத்திலும் சிறியவர்களாக இருந்தாலும் அருகில் செல்லுதலும் பழகுதலும் ஆபத்தினைக் கொடுப்பதாகும்.

நடைபாதையில் பள்ளம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கால் இடறிவிடப்படும். அதனால் தீமையுண்டாவது உறுதி. பெரியபள்ளமாக இருந்து விழுந்தால் தான் ஆபத்து என்று மட்டும் கூறிவிட முடியாது. சிறிய பள்ளமாக இருந்தாலும் அது ஆபத்தினை உண்டாக்கியே தீரும். அது போலவே அற்பர்கள் என்று நாம் பொருட்படுத்தாமல் இருக்கவே கூடாது. அவர்களையும் ஒதுக்கி வைத்தே நாம் வாழ்தல் வேண்டும்.

கயவர் :

வெறுக்கத் தக்க கீழான குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களைத்தான் கயவர்கள் என்று கூறுவோம். இப்படிப்பட்ட கயவர்களைப்பற்றி நம் ஆசிரியர் தெள்ளத்தெளிய விளக்கிக் கூறி அவர்களை மக்கள் கூட்டத்திலேயே சேர்த்துக் கணக்கிடக்கூடாது என்றும் கூறுகிறார். அத்துடன் நின்றாரில்லை.

அவர்கள் மக்கள் போலக் காட்சி யளித்தாலும் அவர்கள் மக்களுமில்லை என்றும் சொல்கிறார். பின்னர் அவர்களை யாரென்று தான் கூறுவது? தோற்றத்தில் மக்களைப்போல இருக்கின்ற சில கீழ்மையான பிறவிகள் என்றே கூறிக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு மக்களுக்கு இருக்க

வேண்டிய மன உணர்ச்சியே கிடையாதாம். ஒரு குறட்பாவினைக் காண்போம்.