பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118


மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்.

கயவர்கள் என்பவர்கள் வடிவத்தால் மக்கள்போல இருப்பார்கள். ஆனால் அவர்களை ஒத்தவர்கள் வேறு எங்குமே யாம் கண்டதில்லை. கயவர்களின் இழிந்த தன்மைகள் இப்படித்தான் என்று எடுத்துச்சொல்லி முடியாது. ஆகையால் - அவர்களைப் போன்ற பிறவிகளைப் பார்ததே யில்லை என்று சுருக்கமான வழியில் அவர்களைப்பற்றிப் பேசி முடித்துவிட்டார் போலும்.

கயவர்களுக்கும் மற்ற மக்களுக்கு இருப்பது போல உறுப்புகளும் தோற்றமும் இருப்பதால் அவர்களைப் பிரித்தறிந்துகொள்ளுதல் எளிமையான தன்று என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டது. தக்கது இன்னது, தகாதது இன்னது என்று அறிகின்ற உணர்வு மக்களுனர்வு என்று கூறப்படும். அக் குணம் இல்லாதவர்களே கயவர்கள் என்பது ஒரு முறையில் அவர்களை விளங்கிக்கொள்ளுவதாகும் கயவர்கள் மலிந்திருக்கும் நாடு என்றென்றும் துன்பமுறும் என்பதும் வெளிப்படை யாகும்.

இகழ்ச்சி :

உலக வாழ்க்கையில் நாள்தோறும் நடந்து வரும் அன்றாட நிகழ்ச்சிகளைக் குறித்துக் காட்டும் ஆசிரியர் நகுதல் என்பதனைச் சிறந்த பொருளில் வைத்துப் பேசுகின்றார். சிலர் ஏதேனும் செயல் செய்தால் 'விளையாட்டுக்காகச் செய்தேன்' என்று கூறுகிறார்கள். ஏதேனும் குற்றம் போன்றதாகப் பேசினாலும் 'விளையாட்டுக்காகப் பேசினேன்' என்று சொல்லுவதையும் நாம் கண்டு வருகின்றோம்.

அதே கருத்தினை அமைத்து அரியதொரு நற்கருத்தினை ஆசிரியர் தருகின்றார். எதையும் சொல்லிவிட்டு 'விளையாட்டிற்காகச் சொன்னேன்' என்று கூறுதல் மிகத்