பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

தவறானதாகும். திருக்குறளில் பண்புடைமை என்னும் அதிகாரம் அரிய பல உண்மைகளை உணர்த்துவதாகும். இகழ்ந்துரைத்தல் என்பதனைப்பற்றிப் பேசி வரும் வழியில், தன்னைத் தனே இகழ்ந்து பேசுவதையும் நாம் கேட்டிருப்பதுண்டு. அதனைக் குறித்துத்தான் ஆசிரியர் கருத்தினை அளிக்கின்றார்.

தன்னை இகழ்ந்து பேசுதல் ஒருவனுக்கு விளையாட்டினிடத்திலும் துன்பந் தருவதாக முடியும். தன்னைத் தானே இகழ்ந்து பேசுதல் கூடவே கூடாது என்பதாம். பிறர்பால் பண்புடன் நடந்துகொள்ளுகின்ற பெரியோர்கள் பகைமை கொண்டிருந்தாலும் அதிலும் நற்பண்பு இருந்து காட்டும். குறட்பா அழகாக அமைந்துள்ளது.

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி, பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.

நகை என்பதை விளையாட்டு என்னும் கருத்தில் அமைத்துக் காட்டினார். தன்னைத் தனே இழிவாகப் பேசிக் கொள்ளும் குணம் சிலரிடம் காணப்படுவதுண்டு. அக் குணம் அப்படிப் பட்டவர்களுக்குத் துன்பம் உண்டாக்கியே விடும். நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி என்று குறிப்பிட்டது சிந்திக்கத் தக்கதாகும்.

மற்ற நேரங்களில் தன்னைத் தானே இகழ்ந்து பேசுதல் எல்லோரிடத்திலும் காணப்பக் கூடியது அன்று நகைத்து மகிழ்ந்து விளையாட்டாக இருக்கின்ற நேரத்தில் சிலர் தம்மையும் மறந்து தம்மைத் தாமே இழிவாக இகழ்ந்து பேசிவிடுவார்களாம். அதற்காகத்தான் ஆசிரியர் வள்ளுவனார் அப்படிப்பட்ட இடத்தினைக் குறிப்பாகத் தான் சுட்டிக் காட்டிப் பேசுகின்றார். நகைத்து மகிழ்தல் என்பது விளையாட்டாகவும் இருக்கும் என்பது குறிப்பானதாகவும் கூறப்பட்டன.

இக் குறட்பாவில் மற்றோர் அரிய உலகியல் தன்மையினையும் ஆசிரியர் கூறுகின்றார். உயர்ந்த பண்புள்ள