பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

வர்களிடம் பகைமை தோன்றினாலும் அதிலும் நன்மையுண்டாகும் என்பதாம். அற்பர்களிடத்தில் - இழிகுண முள்ளவர்களிடத்தில்-பகமை தோன்றினால் அதன் விளைவு கொடுமையான தாகத்தான் இருக்கும். ஆனால் பண்புள்ள பெரியோர்களிடத்தில் பகைமையிலும் நன்மையிருக்கும் என்பது மிக நல்ல அரிய பாராட்டப்படவேண்டிய பொன்னான குணமன்றோ!

பண்பு :

‘பண்பு’ என்பது மனித வாழ்க்கையினை மேம்படுத்தும் அடிப்படையாகும். பண்புள்ளவர்கள் இருப்பதினால் தான் இவ் வுலகமே நல்ல முறையில் இயங்கிவருகிறது என்றும் கூறப்படும். கல்வி, அறிவு, ஆற்றல் இன்னும் இவை போன்ற திறமைகள் ஒருவர் பால் மிகுந்து காணப்பட்டாலும், பண்பு என்பது அவரிடத்தில் காணப் படவில்லை யென்றால் ஏனைய வெல்லாம் இருளில் கிடந்த பொருள்களாகவே முடியும்.

மக்களிடையே ஒருவனை மாணிக்கமாகச் செய்து தருவதற்கு முதற் காரணமாக இருப்பது அவனுடைய பண்பேயாகும். பண்பில்லாதவனிடத்தில் இருக்கும் மற்ற சிறப்பானவைகளெல்லாம் கரைந்து மறைந்துபோய் விடுவனவாகும். காலத்தினாலும் சூழ்நிலையினாலும் சிலர் சிறந்த பண்பாளர்களாக மாறிவிடுதலும் உண்டு. உயர்ந்த பண்பாடுகள் இல்லாமல் இருந்தவர்கள் கூடக் கால மாறு பாட்டினாலும் வாழ்க்கை மாறுதல்களினாலும் பாராட்டப் படவேண்டிய பண்பாளர்களாக மாறிவிடுகிறார்கள்.

சிலர் தம்முடைய நிலை பழைய நிலையினைவிட உயர்த்து மேம்பட்டு விட்டாலும் அதற்கேற்றவாறு உயர்ந்த பண்பாடுகள் பெறாமல் பழைய மாதிரியே கீழான புத்தி படைத்தவர்களாகவே காணப்படுகிறார்கள். இப்படிப் பட்டவர்களிடத்தில் காணப்படுவது தான் ‘பிச்சைக்கார புத்தி’ என்று சொல்வது. மேம்பாடான நிலை ஏற்பட்ட