பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

காலத்திலும் கீழ்மையான புத்தியையே கொண்டிருப்பவர்கள் என்று தான் அர்த்தம்.

இதற்கு இன்றுகூட சரியானபடி பொருள். தெரியாமல் இருக்கின்றதென்று கூறுவது மிகையாகாது. வாழ்க்கையில் மிக்க இயல்பானது என்று நினைத்திருக்கும் உண்மைகளையும் அறிந்து மகிழ்தல் அறிஞர்கள் கடமையாகும்.

புத்தி :

செல்வர் ஒருவர் வீட்டின் முன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். தெருவில் பிச்சை யெடுப்பவன் வீடு வீடாகப் பிச்சைக் கேட்டுக்கொண்டே போனான். பார்பதற்கு அவன் வேலை செய்து பிழைக்கத் தகுதியுள்ளவனாகவே காணப்பட்டான். பழக்கத்தினால் பிச்சையெடுக்கும் வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்கின்றான் போலும்!

செல்வர் உட்கார்ந்திருந்த வீட்டிற்கும் அப் பிச்சைக்காரன் வந்தான், வழக்கம் போல் பிச்சை கேட்டான். செல்வர் அவனைப் பார்த்தார். உற்று நோக்கினார். அவன் கையில் பிச்சை யெடுக்கும் பாத்திரம் இருந்தது. அதனைத் ‘திருவோடு’ என்று கூறுவது வழக்கம். ஒரு வகையான மரத்தினால் செய்யப்பட்டு இருக்கும்.

செல்வர் பிச்சைக்காரனைப் பார்த்துக் கேட்டார். “ஏனப்பா! எத்தனை ஆண்டுகளாக இப்படிப் பிச்சை யெடுத்துக்கொண்டிருக்கிறாய்?”. அதற்குப் பிச்சைக்காரன் பதில் சொன்னான், “நான் பல வருடங்களாகப் பிச்சையெடுத்துத்தான் பிழைக்கிறென், பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும்.”

உடனே செல்வர் வருத்தப்பட்டவராக அவனைப் பார்த்து ஆதரவும் புத்திமதியும் கலந்த வார்த்தைகளைச் சொன்னார். “இந்தாப்பா! நீ இப்படிப் பிச்சையெடுத்துப் பிழைப்பது மிகவும் இழிவான தல்லவா? வேறு நல்ல வேலை செய்து பிழைப்பதற்கும் நீ தகுதியுள்ளவனாகக் காணப்படுகின்றாய்.