பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

பந்தி :

உயர்ந்த அறவுரைகளைக் கூறுகின்றபோது நாட்டுத் தலைவர்களையும் முதன்மையானவர்களையும் வைத்துப் பேசுவதுதான் மரபு. அவ்வாறே ஒரு வீட்டுத் தலைவனைப் பார்த்துக் கூறுகையில் ‘பந்திக்கு முன் நிற்க’ என்று கூறப்பட்டது. அதாவது விருந்தினர்கள் உட்கார்ந்து சாப்பிடுகின்ற போது விருந்திற்கு அழைத்த அவ் வீட்டுத் தலைவர் சாப்பிடுபவர்களுக்கு முன்பு நின்று அவர்களை உபசரிக்க வேண்டும்.

சாப்பாட்டுக்கு வந்திருப்பவர்களின் தகுதி நிலைமையெல்லாம் அவருக்குத்தான் தெரியும். சாப்பாடு பரிமாறுகிறவர்களுக்கு வந்திருப்பவர்களின் ‘தரா தரம்’ தெரியாதன்றோ? அவர்கள் பரிமாறுகிறவர்கள்- நல்ல முறையில் நடந்துகொள்ளாமலும் போகலாம். தவறாகவும் நடந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் தவறாக நடந்து கொண்டாலும் குற்றம் விருந்திற்கு அழைத்தவர் மீது தான் போகும்.

மேலும், சாப்பிடுகிறவர்களில் சிலர் அதிக உபசரிப்பு இருந்தால் இன்பத்துடன் சாப்பிடுவார்கள். இவைகளையெல்லாம் செய்ய வேண்டிய பொறுப்பு வீட்டுத் தலைவனையே சாரும். ஆதலால் தான் வீட்டுத் தலைவனைப் பார்த்து “பந்திக்கு முன் நிற்க!” என்று கூறப்பட்டது. ஆ! என்னே கொடுமை ! இவ்வரிய முதுமொழி சிதைந்து பந்திக்கு முந்திக்கொள்” என்று ஆகிவிட்டதே !

சேனைத் தலைவனாகவும்—படையினை இருந்து நடத்தும் முதல்வனாகவும் இருப்பவனைப் பார்த்துக் கூறப்பட்டது தான் “"படைக்குப்பின் நிற்க'” என்பது. போருக்குச் செல்லுங்கால் படைகளை இருந்து நடத்தவும் ஏவலிட்டு எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று வழிமுறை சொல்லத் தரமான பொறுப்புள்ளவன் தலைவனாகவும், படையினை நடத்துகின்ற தலைவன் போரில்