பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

முதலில் அகப்பட்டுக்கொண்டும் இறந்துவிடுவானேயானால் பின்னர்ப் பெரும்படை நடத்திச் செல்ல ஆளில்லாமல் திணறிப்போய் திசை தப்பிக் கெட்டுவிடும்.

ஆதலால்தான் முன்னே படைகளை அனுப்பிக் கொண்டே பின்னிருந்து தக்கமுறையில் நடந்துகொள்ளுதல் வேண்டும் என்பதாம். இவ்வரிய முதுமொழிகளெல்லாம் நல்ல முறையில் மக்களிடையே பரவினால் வாழ்க்கையின் வழிகாட்டிகளாக அமையும் என்பதில் ஐயமும் உண்டோ?

வீரம் :

நகைப்புக்காவேனும் ஒருவன் தன்னைத் தானே பிறரிடம் இகழ்ந்து பேசுதல் தகாது என்று கண்டோம். அஃதாவது ‘விளையாட்டுக்காகச் சொல்கிறேன்’ என்று சொல்லியும்கூட ஒருவன் தன்னைத் தானே இகழ்ந்துரைத்தல் ஆபத்தாகவே முடியும் என்பதனை ஆசிரியர் நன்கு எடுத்துரைத்தார். நகைப்பு முறை காணக்கூடிய இடங்களும் அவைகள் மூலம் நாம் அறியவேண்டிய பல திறப்பட்ட கருத்துரைகளும் ஆசிரியரால் விளக்கிக் கூறப்பட்டு வருகிறது.

வழியில் போர்வீரர்களிடத்தில் காணப்படுகின்ற வீரஉணர்ச்சிகளில் நகைப்பு என்பது எங்ஙனம் உண்டாகின்றது என்பதனையும் காணுகின்றோம். மக்கள் வாழ்க்கையில் நகைச்சுவை இடம்பெறாத இடம்தான் ஏது? வீரர்களிடத்தில் நகைப்பு உண்டாகின்றபோது அது தனிப் பெரும்மையயுடையதாகவே காணப்படுகிறது. அதுவும் போர்க்களத்தில் போர்புரிந்து கொண்டிருக்கின்ற தருவாயில் நகைப்பான பேச்சு ஒரு போர் வீரனிடம் தோன்றுகின்றதென்றால் அவனுடைய எஃகு நெஞ்சமும் வீரப் பெருமையும் தென்படுகின்றது.

போர் நடைபெறுகின்றது. தனது நாட்டின்மீது படையெடுக்கும் பகைவர்களைத் தாக்கிப் போர் செய்து கொண்டிருக்கின்றான் ஒரு மறவன். கடுமையான போரில்