பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

குறிக்கவே ‘களிற்றோடு போக்கி’ என்று அமைத்தார் ஆசிரியர். வேறு எங்கும் போய் வேவினைத் தேடித் திரியாமல் தன்னுடைய மார்பிலேயே கிடைத்ததே என்று எண்ணி அதனைப் பிடுங்கி மகிழ்ந்தான் வீரன்.

மேலும் மேலும் தொடர்ந்து போர் செய்யவே முனைந்தான் என்பதைக் குறிப்பாகச் சொல்லி வைத்தார். இப்படிப்பட்ட வீரர்களை நாட்டு மன்னர்களும் மக்களும் பெரிதாகப் பாராட்டுவார்கள் என்பது துணிபு.

இப்படிப்பட்ட வீரர்களையே இவ்வுலகம் பாராட்டும் என்பது வரலாறு கண்ட உண்மையாகும். போலியாக வீரம் பேசும் புல்லர்களையும் தான் நாம் கேட்டும், பார்த்தும் வருகின்றோம். வீரம் செறிந்த நாடுதான் தலை நிமிர்ந்து பெருமிதத்துடன் வாழமுடியும் என்பது கண் கூடான உண்மையாகும்.

கோழை :

ஒருவன் போர் செய்யப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு போருக்குச் சென்றானாம். சென்று திரும்பி வந்தான். வருகின்றபோது காலை வெட்டி எடுத்துக் கொண்டு வந்தானாம். போர்செய்து பகைவர் காலை வெட்டி எடுத்து வந்துவிட்டேன் என்று சொல்லிப் பெருமை பேசினான்.

அவனுடைய நண்பன் அவனைப் பார்த்துக் கேட்டான், “போருக்குச் சென்றவன், பகைவனின் தலையை யல்லவா வெட்டி எடுத்துக்கொண்டு வரவேண்டும். அது தானே சிறப்பு? நீ காலை வெட்டி வந்திருக்கிறாயே”, என்று ஏளனம் செய்தானாம்.

அதற்குக் காலைக் கொண்டுவந்த வீரன் சொன்னான். “எனக்குத் தெரியாதா, தலையைத்தான் கொண்டு வரவேண்டுமென்று தலையைக் கொண்டுவரத்தான்நினைத்துச் சென்றேன். எனக்கு முன்னமேயே வேறொரு வீரன் தலையினை வெட்டிக்கொண்டு போய்விட்டான்.