பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

அந்த அழகிய நுதலினைச் சிறப்பித்துப் பேச அவன் வேறு உவமை யெதுவும் கூற விரும்பவில்லை. அவ் வழகு எவ்வளவு ஆற்றல் நிறைந்ததாக இருந்தால் அவனுடைய வீரம் செறிந்த உள்ளத்தினையும் பெருமையினையும் உடைத்தெறிந்திருக்க வேண்டும். வீரப் பெருமை அத்தனையும் உடைந்தே போய்விட்டதாம்.

‘ஒண்ணுதற்கோ உடைந்ததே’ என்ற குறட்பா தொடங்குகிறது. அப் பெண்ணின் ஒளி பொருந்திய நெற்றியின் அழகு ஒன்றுக்கே அவனுடைய போர்ப்பீடு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதாம். அப்படி யென்றால் இன்னும் சுவைக்கப்படவேண்டிய வேறு உறுப்புக்களுக்கெல்லாம் பலம் எப்படித் தேடுவேன் என்பது குறிப்பாயிற்று.

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணுரும் உட்கும்என் பீடு.

‘போர்க்களத்தில் எதிர்க்க வந்திராத பகைவர்களும், எதிர்த்தவர்களுடைய வாய்ச்சொற் கேட்டு அஞ்சியோடுவதற்குக் காரணமாக இருந்த என் வலிமையெல்லாம் இப்பெண்ணின் ஒளி பொருந்திய நெற்றியின் அழ கொன்றுக்கே அழிந்துவிட்டனவே’ - என்பது பொருள்.

பலமுறையும் சிந்தித்தறிய வேண்டிய வீரப்பண்பு இக் குறட்பாவில் சிகரமாக அமைந்து கிடக்கின்றது.

அவ் வீரத்தின் பெருமையினைக் கூற வந்த இடத்தில் போர்க்களத்திற்கு வராத பகைவர்களும் அஞ்சி யோடும் படியான வீரம் என்று குறித்தார். நேரில் போரிட்டவர்கள் அஞ்சி ஓடினார்கள் என்று மட்டும் சொல்லி இருந்தால் அவனுடைய வீரம் மிகப் பெரியதாகக் கூற இடம் இருந்திராது.

இந்த வீரனுடைய போர்த்திறனை நேரில் பார்த்தவர்கள் அஞ்சி ஓடி, போர்க்களத்திற்கு வாராமலேயே இருந்த பகைவர்களிடத்தில் கூறக் கேட்ட அவர்கள் அஞ்சி