பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131


ஓடினார்கள் என்றால் அவனுடைய வீரத்தின் சிறப்பினைச் சொல்லவும் வேண்டுமோ!

இவ் வரிய கருத்தினை "ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு" என்ற சொற்கள் விளக்குகின்றன. அவனுடைய உடல் வலிமை, மனவலிமை ஆகிய இரண்டும் அழிந்தன வென்பதைக் கூறுவ தற்காகவே 'பீடு' என்று சொன்னார்.

வீரன் :

காதல் சிறப்பினைக் கூற வந்த இடத்தில் வீரத்தின் பெருமையினைக் கூறினாரென்றால் அங்கே அறிய வேண்டிய உண்மையும் இல்லாமலில்லை. காதலன் வீரனாக இருக்க வேண்டு மென்பதே மகளிர் விருப்பமாகும். பழங்கால வரலாறுகளைக் காணுகின்றபோது ஒரு பெண் தன் நாயகன் சிறந்த மறவனாக - போர் வீரனாக-இருக்க வேண்டு மென்பதைத் தான் முதன்மையானதாக விரும்புவாள்.

அழகு, அறிவு, செல்வம், கல்வி இன்ன பிற தேவைகளெல்லாம் வீரத்திற்குப் பின்னே வைத்துக் கணக்கிடப்பட வேண்டியவைகள் தான் என்று கூறினாலும் மறுக்க முடியாததாகும். எனவே தான் காதலினைப் பேச வந்த இடத்தில் வீரத்தின் சாயலினையும் தொட்டுக் காட்டிச் சென்றார். திருமணம் நடப்பதற்கு முன்பு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்தல்-பெண் பார்த்தல் என்னும் நிகழ்ச்சிகள் நடை பெறுவதுண்டு.

மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுப்பதற்கு வீரத்தினைத் தான் முதற்காரணமாக வைத்திருந்தார்கள் என்பது இன்றையகாலத்தில் கதைகளாகக் கூறப்பட்டாலும் சரித்திர ஆதாரங்களுடன் இருந்து வந்ததாகத் தெரிகிறது. தைப் பொங்கல் திருநாள் என்பது தமிழர்களின் திருநாளாக் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் திரு நாளினை உழவர்கள் திருநாளாகச் சிறப்பாகக் கொண்டாடி