பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133


யாக வீரத்தை உச்சி மேற்கொண்டு பாராட்டியதாகக் கூறப்படும் கதைகளில் உண்மை யில்லை யென்று சொல்வதற்கு இல்லை.

வீரனுடைய உள்ளம் எப்போதும் எப்படிப்பட்ட, சிந்தனையில் இருக்கும் என்பதனை ஆசிரியர் வள்ளுவனார் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறார். முகத்திலும் மார்பிலும் புண்படுதலைப் பெருமையாக எண்ணி மகிழ்வதே வீரர்களுடைய உள்ளங்களின் தனிப் பண்டாகும்.

போரில் சென்று உடம்பில் புண்படாத நாட்களைப் பயனில்லாத நாட்கள் என்றே சொல்லுவார்களாம். நாள்தோறும் போர் செய்ய வேண்டும் என்ற துடிப்பு மிகுந்திருப்பதே உண்மை வீரனுடைய நெஞ்சுக்கு அடையாளமாகும். குறட்டா ஒன்று :

விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து.

"வீரனானவன் தான் கழித்த நாட்களையெல்லாம் எடுத்துக் கணக்கிட்டு, எண்ணிப் பார்த்து அந் நாட்களுள், முகத்திலும் மார்பிலும் பெரிய புண்கள் (காயங்கள்) படாத நாட்களையெல்லாம் பயன்படாமல் கழிந்த நாட்களில் சேர்த்து வைப்பான்"-தான் எதற்காக வாழ்கின்றோம் என்று எண்ணுகின்ற வீரனுக்கு இக் குறட்பா விடையளிப்பதாகவுள்ளது. போர் செய்யாமல் - காயம் ஏற்படாமல் - தான் வாழ்வது தேவையில்லை என்று எண்ணும் அளவிற்குச் செல்லுகின்றான் என்றால் அவன் மனோவேக வீரப் பண்பு தெள்ளத் தெளியப் புலனாகிவிடுகின்றது.

பயன்படாமல் வாழ்ந்தோமே என்று போர் செய்யாத நாட்களை நினைக்கின்றான் என்பதனை 'வழுக்கினுள் வைக்கும்' என்ற சொற்களால் விளக்கிவைத்தார். விழுப்புண்கள் என்று கூறியது போர்க்களத்திலே ஏற்படும் புண்களாகும். அப் புண்களை மிகவும் பெருமையாகவே குறிப்பிட்டார். 'விழுமியவர்' [என்று கூறுவதுபோல மிக