பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134


உயர்ந்ததாகப் பாராட்டப்பட வேண்டியவைகள் என்னும் குறிப்பினையும் சிறப்பித்துக் கூறினார்.

நாள் - வாள் :

'நாளை எடுத்து' என்று கூறியதில் உள்ள பெருமையினை விளக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டுவது நமது கடமையேயாகும். ஏன்? வாழ்க்கையின் உயர்ந்த தத்துவம் அங்கே அடங்கியுள்ளதாகும் 'ஒருநாள்' என்று சொன்னால் அது எவ்வளவு பொன்னானதாகக் கருதப்படவேண்டும் என்பது சிந்திக்கவேண்டியதொன்றாம்.

கழிந்துபோனால் பின்னர்த் திரும்பி வராததும் பெற முடியாததும் நாளன்றோ! அவ்வளவு அருமையானதாக இருக்கும் 'நாள்' எவ்வளவு அருமையானதாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது சிந்தனைக்குரியதாகும்.

காலத்தின் அருமையினைப் பல இடங்களில் பலவித முறைகளில் ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார். 'நரள்' என்பதனுடைய அருமையினை அறிய வேண்டுமென்றால் காலத்தின் இன்றியமையாத் தன்மையினை உணர்கின்றோம் என்றே பொருள்.

நாள் என்பதனை இன்னதென்று சொல்லவந்த ஆசிரியர் அதனை நமது வாழ்நாளுடன் இணைத்துக் காட்டி அதனை நாள் என எண்ணிக்கொண்டிருப்பவர்கள் உலக அறிவியல் ஞானம் பெறாதவர்கள் என்றும் அது நமது உயிரினை அறுக்கக் கூடிய, வாள் என்று தான் எண்ணவேண்டும் என்றும் குடுப்பிடுகிறார்.

"நாள் என்பதனைப் பொழுது என்னும் அளவுப் பொருளாகப் பலர் நினைத்து வாழ்கின்றார்கள். அப்படி நினைத்து வாழ்தல், அறிவுடையோர் செயலாகக் கருதப்படக்கூடாது என்பதாகும். நாள்தோறும் நாம் காணுகின்ற பழக்கப் பேச்சினைத் தெளிவுபடுத்திச் சிந்தித்தல் வேண்டும் பேசும் போது சிலர் அடிக்கடி "எனக்கு நேரமில்லை;