பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


போதிய காலமில்லை; நான் செய்யவேண்டிய பணிகள் எத்தனையோ இருக்கின்றன" என்று பேசுவார்கள்.

நேரமில்லை, நேரமில்லை; காலமில்லை என்று பேசுகின்ற துடிதுடிப்பான உள்ளம் படைத்த மக்கள் நிறைந்த நாடு விரைவில் முன்னேறும் என்பதாகும். மற்றும் பலர் பேசுவதையும் நாம் கேட்டுத்தான் வருகின்றோம். "இந்த ஒரு மாதம் எப்படிப் போகும் என்று தெரியவில்லை"-"இந்த ஒரு வாரம் எப்படிக் கழியும் என்று தெரியவில்லை"- என்பனபோல பேசுபவர்களையும் நாம் காணத்தான் செய்கின்றோம்.

காலத்தின் அருமையான குறிப்பினை உணராத மக்கள் 'காலம்' கழியவில்லையே போகவில்லையே என்று பேசுகின்ற எண்ணம் படைத்திருப்பார்களேயானால் அப்படிப்பட்டவர்கள் மிகுந்த நாடு ஒருகாலும் முன்னேறாது என்றே பொருள். இன்னும் சிலர் பேசுவதைக் கேட்டால் நமக்குப் பெரும் வியப்பும் துக்கமுந்தான் வருகின்றன.

காலம் :

"பொழுது போகலிங்க! அது தான் உங்களிடம் வந்தேன்" என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். "ஏதோ காலத்தைத் தள்ளிக்கொண்டு இருக்கிறேன் என்றும் சொல்லுகிறார்கள். என்னே கொடுமை! மனிதப் பிறவி எவ்வளவு சிறந்தது! ஒவ்வொரு வினாடியும் விலை மதிக்க முடியாத காலமாயிற்றே. மிக உயர்ந்த பயனுள்ளதாகக் கழிக்கப்பட வேண்டும்!

இவ்வுலகில் எத்தனை நாள் வாழப் போகின்றோம் என்பது யாருக்குத் தெரியும்? ஒருவருக்கும் தெரியாதே! யாராவது நண்பரைப் பார்த்து 'உங்களை ஒன்று கேட்கலாமென்று இருந்தேன். இப்போது தான் நம்முடைய சந்திப்பு ஏற்பட்டது' என்றார். அதற்கு அவர் "என்ன,