பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136


கேட்கலா மென்று இருந்தீர்கள்" என்றார். பின் வருமாறு வினா வந்தது: "இந்த உலகில் எத்தனை ஆண்டுகள் இருக்கலாமென்று இருக்கிறீர்கள்?" இக் கேள்வியினைக் கேட்கப்பட்டவருக்கு எப்படியிருக்கும்! "எண்பது ஆண்டுகள் இருக்கலாமென்று இருக்கிறேன். அதற்குள் வேலை முடிய வில்லை யென்றால், இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் இருந்து விட்டுப்போவேன்" என்பதாகவா பதில் சொல்லுவார். இல்லையே!

கேள்வி கேட்டவரைப் பைத்தியக்காரர் என்று சொல்லுவாரே! "நம் கையிலா இருக்கிறது" என்று பேசுவதுண்டே! 'விதி வந்தால் போக வேண்டியது தானே' என்றும் சொல்கிறார்களே உலக நடையில் மக்களின் போக்கு பற்பல விதமாக இருப்பதில்லையா? ஏன் நீங்கள் உலகில் இருந்து சொண்டிருக்கிறீர்கள்?" என்று ஒருவரைக் கேட்டதற்கு அவர், "இன்னும் சாவு வரவில்லை. அதனால் தான் இருக்கின்றேன்" என்றாராம்.

இவைகளை யெல்லாம் ஒருவாறு சிந்தித்துப் பார்த்தால் மக்களில் பெரும்பாலோர் அரிய மானிடப் பிறவியினை எவ்வளவு இழிவாகக் கருதிவிட்டார்கள் என்பதும் காலத்தின் பெருஞ் சிறப்பினைச் சிறிதளவும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்களே என்பதும் புலனாகிவிடுகிறது.

"உலகில் இறப்பு (மரணம்) வருதல் உறங்குவதுபோல ஆகும். பிறப்பு என்பது உறங்கி விழித்தெழுவது போல ஆகும். என்னும் 'மிகப் பெரிய உண்மை நிறைந்த கருத்துரையினை அமைத்து எளிமையான குறட்பாவினை ஆசிரியர் தருகின்றார்.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

உலகில் உறங்குவதும், விழிப்பதும் எவ்வாறு இயற்கையாக நடைபெறுகின்றதோ அதுபோல இறப்பதும் பிறப்பதும் நடந்து வருகின்றதாகும். இறந்து (சாக்காடு)