பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137


போதல் என்பதனை உறங்குவது போலும் என்று கூறி வைத்தார். சிந்தித்தறிய வேண்டிய உண்மையொன்று நம்மைக் கவர்ந்து விடுகின்றது.

உறக்கம் வருகின்ற நேரத்தினை யாருமே கூற முடியாது. அதுவேபோல இறப்பு வருகின்ற காலத்தினை அறுதியிட்டுக் கூற முடியாது என்று உணர வேண்டும். கழிக்கின்ற நேரத்தினைக் கணக்கிட்டுச் சொல்லலாம். சொல்லிய நேரத்தில் விழிப்பதற்கு வழியுண்டு. அதுவே போன்று பிறக்கின்ற நேரத்தினை நாம் அறிய முடிகிறது. குழந்தை பிறக்கிறது என்று நாம் சொல்ல முடிகிறது. ஆனால் மனிதன் இறந்து கொண்டிருக்கின்றான் என்று சொல்ல முடிவதில்லை. 'இறந்து விட்டான்' என்று தான் சொல்லுகிறோம்.

எனவே தான் வாழ்நாள் அளவு யாரும் அறிந்து கொள்ள முடியாததாகும் என்பது முடிவாகும். ஆதலால் தான் காலம் என்பதனை நன்கு அறிந்தே வாழ்கின்ற மக்களை ஆசிரியர் சிறப்பித்துக் கூறுகின்றார். உலகில் வாழ்கின்ற மக்கள் அத்தனை பேரும் காலத்தின் அருமையினை உணர்ந்தவர்கள் என்று கூறவும் முடியாதன்றோ?

காலம் என்பதின் ஓர் அளவு - கோலான நாளினை வைத்துக் குறளொன்று தருகின்றார். நாள் என்பதனை வெறும் கால அளவாக எண்ணிவிடக் கூடாதென்றும் அது நம்முடைய உயிரினைச் சிறுகச் சிறுக அறுத்துக்கொண்டு போகின்ற வாள் என்றே நினைக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.

வாள் :

நாள் என்று அளவு செய்யப்படுகின்ற ஒரு கால அளவு போல் தன்னைக் காட்டி, உயிரினை அறுத்துச் செல்கின்ற

9