பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


தன்னுடைய உடம்பில் பாய்ந்து இருந்த வேலினை மகிழ்ச்சியுடன் பறித்தெடுத்து போர் செய்தான் என்பதனை முன்னர்க் கண்டோம்.

'பறியா நகும்' என்று அந்தக் குறட்பாவில் கூறப்பட்டது. காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் காதல் உள்ளத்துடன் சந்திக்கிறார்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கின்றபோ தெல்லாம் உரையாடுகின்ற வாய்ப்பு கிடைப்பது இல்லை. காதலன் பேசுகின்ற அருமையான ஓர் இடத்தில் தன்னுடைய காதலி புன்முறுவல் செய்கின்ற செய்தியினை கூறுகின்றான். 'நான் பார்க்கின்றபோது அந்தப் பெண் நிலத்தை நோக்குகின்றாள். நான் பார்க்காதபோது அந்தக் காதலி தன்னை நோக்கி தனக்கு உள்ளே மகிழ்ச்சி அடைகின்றாள்' என்ற கருத்தினை எளிமையாக குறட்பா ஒன்று குறிப்பிடுகின்றது.

"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்."

இக்குறட்பாவில் "நோக்கும்" என்ற சொல் அப் பெண்ணின் காதல் இன்ப உள்ளத்தினை தெளிவாக புலப்படுத்திவிட்டது. மற்றொரு குறட்பாவில் அப்பெண்ணின் பார்வையினைப் பற்றி வேறு கோணத்தில் காதலன் சிறப்பித்துக் கூறுகின்றான். குறியாகப் பார்க்கின்ற பார்வை போல் இல்லாமல் அந்தப் பெண் ஒரு கண்ணினை சுருங்குதல், போல் செய்து கொண்டு அவனைப் பார்த்து நகைக்கின்றாள் என்று காதலன் கூறுகின்றான். இவ்வாறு நோக்கிய நோக்கு அந்தப் பெண்ணின் உள்ளத்தினை மேலும் சிறப்பித்து உணர்த்துவதாயிற்று.

"குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்"

காதலன் அந்தப் பெண்ணின் பார்வையினைக் கண்டறிந்து காதல் முகத்தினை வெளிப்படுத்தியவன் போல்