பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142


"பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற் றன்று".

அவனைப் பார்த்து சிரிப்பவர்கள் எல்லாம் அறிவு இல்லாதவர்கள் என்று கூற அந்தக் காதலன் தயங்கவில்லை. காதலன் தன்னுடைய காதலியைச் சந்தித்து மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்துகிறான். நிறைந்த இன்பத்தினை நுகர்கின்றான். சிறந்த வாழ்க்கையில் தங்கள் காதல் வாழ்க்கை நடக்கின்றது. அப்படிப் பட்டவனைப் பார்த்து சிலர் நகைக்கின்றார்கள். அந்தக் காதலனைக் கண்டால் உடனே சிரிக்கின்றார்கள். அவர்களை எல்லாம் அறிவு இல்லாதவர்கள் என்று சொல்வதோடு 'காதல்' உணர்வற்றவர்கள் என்றும் காதலன் சொல்லுகின்றான்.

"யாம் கண்ணிற் காணதகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு"

காதலி அந்த வருத்தத்தினை தன்னுடைய கண்களின் மீது ஏற்றிக் கூறுகின்றாள். தங்களைத்தாங்களே நொந்து கொண்டு பேசுதல் அவர்களுக்கு இயல்பான பண்பாகும். தன்னுடைய கண்களை நோக்கி அந்தக் காதலி சொல்லுகின்றாள். அந்த நேரத்தில் விரைந்து சென்று காதலனைக் கண்ட கண்கள் இப்போது தாமே அழுதுகொண்டு இருப்பது நகைப்புக்கு இடம் கொடுக்கிறது என்று அந்தக் காதலி சொல்லுகின்றாள். தாமே காதலனை விரைந்து சென்று பார்த்த கண்கள் பிரிந்திருக்கும் இப்போது அழுதுகொண்டு இருக்கலாமா என்று குறட்பா ஒன்று சொல்லுகின்றது.

"கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்கது உடைத்து".

உலக வாழ்க்கையில் பூமியை பூமாதேவி என்று கூறுவது வழக்கமாக இருந்து வருகிறது. உழைத்து வாழ்தலின்