பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

சிறப்பினை ஆசிரியர் வள்ளுவனார் மிக அழகாகக் கூறுகின்றார். உலகில் பலர் வறுமையிலே வாடுகிறார்கள். 'நாம் வறியாளர்களாக இருக்கிறோம்' என்று சொல்லிக்கொண்டு சோம்பேறிகளாக இருப்பவர்களைப் பார்த்து, நிவம் என்று சிறப்பாகச் சொல்லப்படுகின்ற பெண்மணி நகைக்கின்றாள். உழைத்து நல்லபடியாக வாழ்வதற்கு நிலம் இருக்க இப்படி சோம்பேறிகளாக இருக்கலாமா என்பதாக குறட்பா கூறுகின்றது. வறுமையைப் போக்கிவிட வேண்டுமே என்பது சொல்லாமல் சொல்லப்பட்ட கருத்தாகும். நிலம் என்ற பெண் நகைக்கின்றாள் என்று அருமையாகக் குறட்பாவில் அமைந்து இருக்கிறது.

"இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலம்என்னும் நல்லாள் நகும்".

தமது நூலில், நகைப்பு என்கின்ற உயர்ந்த தன்மையை முதன்மையாக அமைத்துக் காட்டி அருமையான செய்திகளை எல்லாம் ஆசிரியர் திருவள்ளுவனார் நமக்குச் சொல்லி வைத்த தன்மை மிகவும் போற்றுதற்கு உரியதாகும்.