பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

தனால் அடையும் இன்பம் மிகப் பெரிதாக இருக்குமே என்பதை அறியாமல் இருக்கின்றார்களே என்று கேட்கிறார். கொடுப்பதற்கு மனமில்லாமல் இருப்பவர்கள் தாம் வைத்திருக்கும் பொருளை நிலையாக அழிவில்லாதபடி வைத்திருக்க முடியுமா ? அதுதான் இல்லையே!

அதுவும் ஒரு காலத்தில் இழக்கவேண்டியதுதானே! இழப்பதினால் ஏற்படுகின்ற துன்பம் எவ்வளவு கொடுமையானது! இத் துன்பத்தினைத் தெரிந்திருந்தும் கொடுத்து அதனால் வரும் இன்பத்தினை அறியாதவர்களை ‘வன் கணவர்’ (வன்கண்ணவர்) என்று ஆசிரியர் குறிப்பிட்டார். அஃதாவது கடுகளவேனும் இரக்கமில்லாத பாவிகள் என்பதாம்.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடமை

வைத்துஇழக்கும் வன்கண வர்.

தங்களுடைய உடைமைகளை என்றேனும் இழந்து தானே தீரவேண்டும் என்பதற்காக ‘வைத்து இழக்கும்’: கொடியவர்களாகின்றனரே என்று கடிந்து பேசுகிறார். இழத்தல் என்பதனால் பொருளை மட்டும் இழக்கிறார்கள் என்பது அன்று! அப் பொருளால் அடைய வேண்டிய அறப் பயனையும் இன்பத்தினையும் இழந்துவிடுகின்றார்களே !

ஈகையினால் ஏற்படும் மனமகிழ்ச்சி மிகச் சிறந்ததே யாகும். ஆதலால் ‘உவக்கும்’ என்று கூறி அதற்குப் பின்னரே இன்பம் என்றும் அமைத்தார். மனித வாழ்க்கையின் அடிப்படைக் கொள்கையே இதுதான் என்பது ஆசிரியரின் முடிந்த முடிவாகும். பொருள் எப்போதும் அழியும் தன்மையதாகும். ஆதலால்தான் இழத்தல் என்பதும் இயல்பாயிற்று.

இல்லறத்தில் இருந்து வாழ்பவனுக்கு இப்பெரும் பண்பு தலையாக இருக்கவேண்டியதாயிற்று. உற்றார் உறவினர் சுற்றத்தார் என்று சொல்லப்படும் சொற்களினால் வருகின்றவர்களுக்கு ஆதரவு தருதல் ‘ஈகை’ என்ற

|