பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊழ்

95


மேற்கொள்ள இயலாதவர்களாயுள்ளனர். விதி அங்ஙனம் அவர்களை இன்பத்தை அனுபவிக்கச் செய்யாது ஒழிந்தால் அவர்களால் துறவறத்தை மேற்கொள்ள முடியும்.

மேற் குறளில் எல்லாமுடைய பெருஞ் செல்வனும் விதியிருந்தாலொழிய, அவற்றை அனுபவித்தல் இயலாது என்றார்; அதனால் ஒன்றுமற்ற ஏழையும் விதியினால், பலவகை இன்பங்களைை அடைய முடியும் என்று கூறுகின்றார்.

துப்புரவு - அனுபவித்தற்குரிய பொருள்; உறற்பால-அடைய வேண்டுவன; ஊட்டா - அடையச் செய்யாது. 378

9.நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லல் படுவ தெவன்?

நன்மை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றவர்,. தீமை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏன்? 379

10.ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

விதியைக் காட்டிலும் வலிமை உடையவை வேறு எவை இவ்வுலகின் கண் உள்ளன. அந்த விதியை விலக்குவதற்காக வேறு ஒரு வழியினை நாம் ஆராய்ந்தாலும், அங்கே அந்த விதியே முன் வந்து நிற்கும். (ஊழ் அம்முயற்சி பயன்படாமல் தடுக்கும் என்பதாம்) 380

அறத்துப்பால் முற்றிற்று.