பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

 திருக்குறள்


அற்ற சிறந்த குணத்தை அடையலாம். அதனால் எத்தகைய துன்பங்களும் எந்தக் காலத்தும் நம்மை வந்து அடைய மாட்டா. 4

5.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

கடவுளுடைய உண்மையான சிறப்புக்களை உணர்ந்து, நாம் அவரை இடைவிடாது வணங்குதல் வேண்டும். அவ்வாறு வணங்கினால் நாம் சென்ற பிறப்பில் செய்த வினைகள், இந்தப் பிறப்பில் செய்த வினைகள் ஆகிய இரண்டும் நம்மை வந்து துன்புறுத்தமாட்டா.

இருள் சேர் - துன்பம் பொருந்திய ‘இருவினை’ என்பதற்கு நல்வினை, தீவினை என்றும் பொருள் கூறுவர்; புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல். 5

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி யென்னும் ஐந்தின் வழியாகத் தோன்றத்தக்க ஐவகை ஆசைகளையும் இயல்பாகவே வென்று விளங்குபவரே கடவுள். அக்கடவுளின் நல்லொழுக்க வழியைக் கடைப்பிடித்து ஐவகை ஆசைகளையும் அடக்கி வாழ்பவர் இவ்வுலகின் கண் நெடுங்காலம் இனிது இருப்பர்.

‘நீடு நிலமிசை வாழ்வார்’ என்பதற்கு விண்ணுலகத்தில் நிலைத்து வாழ்வார் என்றும் பொருள் கூறுவர். 6

7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அறிவு, ஆற்றல், குணம் முதலியவைகளில் தனக்குச் சமம் எவரும் இல்லாத கடவுளின் பாதங்களை இடைவிடாது சிந்தித்தால் நாம் மனக் கவலை சிறிதும் இன்றி வாழலாம். அவ்விதம் நினையாதவர்க்கு மனக் கவலை நீங்குதல் அரிது. 7

8.அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீங்தல் அரிது.

கடவுள் கடல் போன்று பரந்துள்ள அறச்செயலே வடிவாக உடையவர்; கருணையும் வாய்ந்தவர். அவருடைய