பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

திருக்குறள்



51. தெரிந்து தெளிதல்


1.அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

நீதி நெறி, பொருள், இன்பம், உயிருக்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராய்ந்த பிறகே ஒருவன் ஒரு தொழிலுக்கு உரியவனாகத் தேர்ந்தெடுக்கப் படல் வேண்டும்.

நான்கின் நிறம் தெரிந்து தேறலாவது, இவன் நீதி தவறி நடக்கின்றவனா, பிறர் பொருளைக் கைக்கொள்ள எண்ணுபவனா, சிற்றின்பப் பிரியனா, தன் உயிருக்காக அஞ்சும் கோழையா என நான்கு வகையாலும் சோதித்துப் பிறகு தெளிதல்.

தெரிந்து தெளிதல்-இவன் தகுதியுடையவன், தகுதி யில்லாதவன் என ஆராய்ந்து நிச்சயித்தல். 501

2.குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.

நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றங்கள் சிறிதும் இல்லாமல், பழி பாவங்கட்கு அஞ்சி நாணும் தன்மையுடைய ஒருவனையே ஆராய்ந்து தெரிந்தெடுத்தல் வேண்டும்.

குடி-குடும்பம்; வடுப்பரிதல்-குற்றம் வருமோ என அஞ்சியிருக்கும் தன்மை; கட்டே-கண்ணதே. 502

3.அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

அருமையான நூல்கள் பலவற்றையும் கற்றுத் தெரிந்து குற்றம் சிறிதும் இல்லாதவர் எனப்படுவோரிடத்தும் ஆராய்ந்து பார்ச்கும் போது, அறியாமை இல்லாமல் இருத்தல் அருமையாகும். 503

4.குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

ஒருவனுக்குள்ள குணங்களையும் ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்ந்து பார்த்து, அவைகளுள் மிகுதியாக