பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்வன்மை

171



7.சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

ஒருவன் தான் எண்ணிய ஒன்றைப் பிறர் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்ல வல்லவனாகவும், அவ்விதம் சொல்லும் போது எத்தகைய சொற்குற்றம், பொருட் குற்றங்களையும் புரியாதவனாகவும், தான் சொல்ல விரும்பும் ஒன்றைச் சொல்லுதற்கு வேண்டிய அஞ்சாமை உடையவனாகவுமாக இருந்தால் அவன் பேச்சில் குற்றம் கண்டு அவனை வென்று விட எவராலும் இயலாது.

இகல்-பகைமை, கருத்து வேறுபாடு. 647

8.விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

தாம் சொல்ல விரும்பும் கருத்துக்களை ஒழுங்கு பெறத் தொகுத்து வைத்துக் கொண்டு இனிமையாகச் சொல்லுதல் வேண்டும். அத்தகைய வல்லமை வாய்ந்தவர் கிடைக்கப் பெற்றால், இவ்வுலகில் உள்ளோர் தாமே அவரிடம் விரைந்து சென்று, அவர் சொல்லும் தொழில் கேட்டு அவ்வண்ணமே நடக்கவும் முன் வருவர்.

ஞாலம்-உலகில் உள்ள மக்கள்; நிரந்து ழுங்குபடக் கோத்து. 648

9.பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

குற்றமற்றவைகளாகிய சில சொற்களால் ஒரு கருத்தை விளக்கிச் சொல்ல அறியாதவரே, பொருளற்ற பலப் பல சொற்களை அடுக்கிச் சொல்ல விரும்புவர்.

காமுறுதல்-விரும்புதல்; மன்ற-நிச்சயமாக அல்லது விளக்கமாக; தேற்றாதவர்-தெளியாதவர், அறியாதவர். 649

10.இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

தாம் கற்ற நூல்களின் பொருளைப் பிறர் அறிந்து கொள்ளும்படி விளக்கமாகச் சொல்ல இயலாதவர், கொத்தாக.