பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீ நட்பு

217



அழிவந்த-கேடு விளையத் தக்க; வழிவந்த கேண்மை-தொன்று தொட்டுப் பழகிய நட்பு. 807

8.கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.

பழகிய நண்பர் புரிந்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், அதைக் கேளாமல் நட்பின் உரிமையையே பாராட்ட வல்லவர்களுக்கு அந்த நண்பர் தவறு செய்வாராயின், அந்த நாள் ஒரு நன்னாளாகும்.

கேள்-நண்பர்; இழுக்கம்-குற்றம்; நாள்-இங்கே இச்சொல் 'நல்லநாள்’ என்பதைக் குறிக்கும். 808

9.கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.

என்றும் பிரியாமல் பழைமை வாய்ந்த நட்பினையுடையவர் தம் நட்பினைக் கை விடாதவரை உலகத்தவர் விரும்பிப் போற்றுவர்.

கெடாஅ-பிரியாத அல்லது நட்பின் தொடர்பு அறாத; உலகு-உலகம் அல்லது உலகத்தில் உள்ள பெரியோர்; தலைப்பிரிதல் -விட்டு நீங்குதல். 809

10.விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

பழைய நண்பர் தவறு செய்த போதிலும், அந்த நண்பரிடத்துத் தாம் முன்பு கொண்டிருந்த உரிமைப் பண்பிலிருந்து மாறாதவர் தம் பகைவராலும் விரும்புதற்குரியவராவார். 810

82. தீ நட்பு


1.பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது.

தமக்கு விருப்பமான ஒன்றை உண்ண விரும்புவோர் எவ்வளவு ஆவலோடு அதை அணுகுவாரோ அவ்வளவு அன்போடு வந்து ஒருவர் பழகினாலும் அவர் தீக்குணம் உடைய

தி.-15